Peraiyur temple


New Website 2018

New website available : www.peraiyurtemple.com

 [1] மகத்தான யக்ஞம்:

ருத்ரம் என்பது சிவனைப் போற்றும் யஜூர்வேதப் பாடலாகும். இதைப் பலமுறை உச்சரித்து ருத்ர யாகம் செய்வார்கள்.

ருத்ர ஏகாதசி: 11 புரோகிதர்கள் 11 முறை ருத்ரத்தைப் பாராயணம் செய்து 121 தடவை ஹோமம் செய்வது
மஹாருத்ரம்: ருத்ரத்தை 1331 (11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது
அதிருத்ரம்: ருத்ரத்தை 14641 (11X 11X11X11) தடவைப் பாடி யாகம் செய்வது.

[2] ஸ்ரீ மஹா கணபதி ஹோமம்:

எந்தக் காரியத்தைத் தொடங்கும் முன்னரும் நாம் செய்ய வேண்டியது.

நவக்ரஹ ஹோமம்:

புதிய கட்டிடம், வீடு கட்டிய போதும், மேலும் பல புதிய முயற்சிகள் செய்யும்போதும் ஒன்பது கிரகங்களின் தீய பார்வை படாமல் இருக்க செய்யும் ஹோமம்.

சுதர்ஸன ஹோமம்:

இது எதிரிகளின் தொல்லையைப் போக்கும்.

[3] சூரியனை பார்க்கக்கூடாத நேரங்கள் எவை தெரியுமா?

காலை வேளையில் கதிரவனை தரிசிப்பதும் வணங்குவதும் நன்று; மாலை நேரத்தில் சூரியனைப் பார்ப்பதும் சூரிய ஒளியை உடலில் ஏற்பதும் அழகை அதிகரிப்பதற்கு உதவும். ஆனால் சூரியனைப் பார்க்கக்கூடாத நேரங்களும் உள்ளன. நீரில் பிரதிபலிக்கும் போதும், நடுபகலிலும் சூரியனைப் பார்க்கக் கூடாது. ஜொலித்து நிற்கும் சூரியனை வெறும் கண்களால் காண்பது தீங்கு விளைவிக்கும். நடுப்பகலில் சூரியனைப் பார்ப்பதால் பார்வைக் கோளாறுகள் ஏற்பட வழியுண்டு. விஞ்ஞானமும் இதனை ஒப்புகொள்கிறது. பழங்காலத்தில் நீரில் பிரதிபலிக்கும் சூரியனை மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக, சூரியன் வருண பகவானுடன் இணைந்திருக்கும் காட்சியைக் காணக்கூடாது என்று கூறி விலக்கினர்.

[4] ஸ்ரீ ருத்ர மஹிமை (நமகமும் சமகமும்)

ருத்ரம் என்னும் துதி யஜுர் வேதத்தில் உள்ளது. இது நமகம், சமகம் என இரண்டு பகுதிகளை உடையது. இறைவனிடம் என்ன வேண்டுவது என்று திணருபவருக்கு இது ஒரு பெரிய பட்டியலைத் தருகிறது. இது பற்றிய மிகவும் அற்புதமான விஷயம் என்னவென்றால் நல்ல தூக்கத்தையும் தருக என்று இறைவனை வேண்டுவதாகும். மேலை நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் வாழ்பவருக்கு இன்று அரிதான பொருள் நல்ல நிம்மதியான உறக்கம் ஆகும். பலவித கவலைகளாலும் இயந்திரம் போன்ற வாழ்வாலும் மனிதர்கள் கஷ்டப் படுகிறார்கள். இதை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் முன்னோர்கள் அழகாக வரிசையாக சமகம் என்னும் பகுதியில் பட்டியல் இட்டுவிட்டார்கள்.

நமகம் என்னும் பகுதியில் சிவ பெருமானை நூற்றுக் கணக்கான பெயர்களால் நமஸ்கரிக்கிறோம். இதனால் இதை சத ருத்ரீயம் என்று அழைப்பர். சமகம் என்னும் பகுதியில் நமக்கு வேண்டியவற்றை எல்லாம் கேட்கிறோம். இதைக் கேட்டாலேயே போதும். அத்தனையும் கிடைத்துவிடும். சிவன் கோவிலகளில் அபிஷேக நேரத்தில் இதைப் பாராயணம் செய்வார்கள். இந்துக்களின் முக்கிய சடங்குகள் அனைத்திலும் ருத்ர பாராயணம் நடைபெறும்.

நமகம் என்னும் பகுதியில் 194 நம: வரும்
சமகம் என்னும் பகுதியில் 328 சமே வரும்.
நமகம் பகுதியில் சிவனை 300 பெயர்களால் வணங்குகிறோம்.

ருத்ரத்துக்கும் 11 என்ற எண்ணுக்கும் தொடர்பு மிக அதிகம்.ஏகாதச ருத்ரர்கள் என்று ருத்ரர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுவதால் குறைந்தது 11 தடவையும் அதிகமாக இதன் பல மடங்குகளிலும் பாராயணம் செய்வர்.

ஸ்ரீருத்ரம் 174 ரிக்குகளைக் கொண்டது. இதில் 32 மஹா மந்திரங்கள் இருக்கின்றன. ருத்ரத்தில் 11 பிரிவுகள் (அநுவாகங்கள்), சமகத்தில் 11 பிரிவுகள் இருக்கின்றன. ருத்ரத்தின் 11 அநுவாகங்களில் நடுவிலுள்ள ஐந்தாவது அநுவாகத்தில் நமச்சிவாய என்ற மஹா மந்திரம் வருவதால் அந்த இடம் வரும் போது முழுக் கவனத்தையும் செலுத்தி உரத்த குரலில் கூறுவர். 11ஆவது அநுவாகத்தில் மரண பயத்தை நீக்கும் ம்ருயுஞ்ஜய மந்திரம் (ஓம் த்ரயம்பகம் யஜாமஹே--------) வருகிறது.
ஸ்ரீ ருத்ரத்திற்கு சாயணர், பட்ட பாஸ்கரர், அபிநவ சங்கரர் ஆகிய பெரியோர்கள் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியிருக்கிறார்கள்.

பெரிய புதிர் உலகிலேயே பெரிய கணித வல்லுநர்கள் இந்துக்கள்தான். சின்னக் குழந்தை முதல் பெரியோர் வரை தினசரி துதிகளில் கூட “டெசிமல்” முறையை (தசாம்ச) பயன்படுத்தி சூர்ய கோடி சமப் ப்ரபா என்றெல்லாம் வேண்டுவதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

நமகத்தில் 11ஆவது அநுவாகத்தில் ஒற்றைபடை எண்களாக 33 வரையும் இரட்டைப் படை எண்களாக 44 வரையும் எண்கள் மட்டுமே மந்திரமாக உச்சரிக்கப்படுகின்றன. இது வரை இதற்கு எத்தனையோ தத்துவ விளக்கங்கள் கொடுக்கப்பட்டபோதிலும் ஒன்றுகூட எல்லா எண்களையும் விளக்குவதாக இல்லை.

ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் இப்படி வெறும் எண்களை மட்டுமே மந்திரமாக்கிய இந்தியர்களின் கணிதப் புலமையையும் ஆர்வத்தையும் என்னவென்று புகழ்வது. உலகில் வேறு எந்த கலாசரத்திலும் இறைவனைத் துதிபாடும் மந்திரங்களில் இப்படி எண்கள் வருவதில்லை. ஒரு இடம் அல்ல, இரண்டு இடம் அல்ல. உலகின் மிகப் பழமையான சமய நூலான ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் பெரிய பெரிய எண்கள் வருகின்றன. வேதங்களின் முழு அர்த்தம் புரியாத வெளிநாட்டுக்காரர்கள் இதற்கு மனம் போன போக்கில் பொருள் செய்திருக்கிறார்கள்.

இத்தனை கோட்டைகளை ஆரியர்கள் அழித்தார்கள், இத்தனை திராவிடர்களை ஆரியர்கள் கொன்றார்கள் என்றெல்லாம் ஒரே கதைதான்! அந்த எண்கள் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் சிரிப்புதான் வரும். சுருக்கமாகச் சொல்லப் போனால் திராவிட என்ற ஒரு இனத்தைக் கற்பித்து அதற்கு கோழைப் பட்டத்தையும் சூட்டிவிட்டார்கள்! காட்டுமிராண்டி ஆரியர்களிடம் செமை அடிவாங்கி, கோழைகள் போல தெற்கே ஓடிவந்து காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்துகொண்டார்கள் திராவிடர்கள் என்று வெள்ளைக்கார அறிஞர்கள் எழுதிவைத்தனர். இது தவறு. ஆனால் சங்கத் தமிழ் இலக்கியமோ வேதங்களையும் வேள்விகளையும் புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுகிறது!)

வேதங்களைப் பாடிய ரிஷி முனிவர்கள் தாங்கள் ரகசிய மொழியில், சங்கேத மொழியில் பாடுவதை விரும்புகிறோம் என்று பாடுகிறார்கள். சங்கத் தமிழ் புலவர்களும் இதை அறிந்து வேதத்துக்கு மறை (ரகசியம்) என்ற அழகிய தமிழ் சொல்லைச் சூட்டியுள்ளனர்.

[5] விரைவில் திருமணம் ஆக

7-ல் ராகு இருப்பது கடுமையான திருமண தோஷமாகும். எவ்வளவு முயன்றும் திருமணம் கூடுவதில்லை. இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் அல்லது செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வரவும். இவ்விரதம் ஒன்பது வாரங்கள் செய்து வர திருமணம் தோஷம் விலகும். திருமணம் கூடி வரும்.

[6] ஆவணி மாத பண்டிகைகள் :


ஆவணி மாதத்தில் பல பண்டிகைகள் வருகின்றன. முக்கியமாக ஆவணி - அவிட்டம் - அந்தணர்களுக்கான பண்டிகை. அந்தணர் என்பவர் வேதம் ஓதுவோர். வேதங்களையும், சாஸ்திரங்களையும் ஒதுமுன், பவித்ரமாக இருக்க வேண்டும் என்பதால் - மனசும், தேகமும் சுத்தப்படுத்த இந்த ஆவணி அவிட்டத்தன்று பூணூல் மாற்றிக் கொள்வது பழக்கத்தில் இருந்து வருகிறது. நல்ல காரியங்கள் செய்யும் போதும், அதேபோல் அசுத்தம் ஏதேனும் ஏற்பட்டுவிட்டால் அந்த தோஷத்தைப் போக்கவும் பூணூல் மாற்றிக் கொள்வது பழக்கம். அது போல் வேத ஆரம்பத்திலும் போட்டுக் கொள்வது பழக்கம். ஸ்ராவண மாதத்தில் 'வேதாரம்பம்' தொடங்குகிறது. இந்த சிராவண மாதம், வேத ஆரம்பத்துக்காக ஏற்பட்டது ஆவணி அவிட்டமும், பூணூல் மாற்றிக் கொள்ளுதலும். இன்றைக்கு வேத ஆரம்பமோ, சாஸ்தீர அறிவோ இரண்டாம் பட்சமாய்ப் போய் பூணூல் மாற்றிக் கொள்வது மட்டுமே பிரதானமாக நிற்கிறது. ஆவணி அவிட்டத்தில் பூணூல் போட்டுக் கொள்வது ஒரு அங்கம். அவ்வளவுதான். அதுவே பிரதானமல்ல. உபாகர்மா தான் பிரதானம். மந்திரங்கள் தான் முக்கியம். இன்றைக்கு ஆவணி அவிட்டத்தன்று நம் மக்கள், ஆபிஸ் போகிற அவசரத்தில் பூணூலை மட்டும் போட்டுக் கொண்டு மந்திரம் ஏதும் சொல்லாமல் கிளம்பி விடுகிறார்கள். இது மிகத் தவறு. அன்று ஒரு நாளாவது அலுவலகத்துக்கு லீவ் போட்டு விட்டு மந்திரங்களை முழுமையாகச் சொல்லவேண்டும். அதன் தொடர்ச்சியாக காயத்ரி ஜபம். அன்று காயத்ரீ தேவியைத் துதித்து வழிபட்டால் எல்லா நலன்களும் கிடைக்கும். 

[7] திருமணங்கள் நடக்காதது ஏன்?

ஆடியில் தெய்வங்களுக்கு திருமணம் நடக்கும். ராமேஸ்வரத்தில் சுவாமி- அம்பாள் திருமணம் ஆடிப்பூரத்தன்று நடத்தப்படும். இந்த மாதம் தெய்வப்பணியில் மக்கள் கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக ஆடியிலும், மார்கழியிலும் திருமணம் செய்ய தடை விதித்தனர். அறிவியல் ரீதியாக இந்த மாதங்களில் மனிதனை நோய்கள் தாக்கும். ஆடி காற்றால் மூச்சுத்திணறல் போன்ற நோய்கள் ஏற்படும். இது ஆண்களைக் கடுமையாகத் தாக்கும். பெண்களைப் பொறுத்தவரை ஆடியில் கர்ப்பமாகும் பெண் சித்திரையில் குழந்தை பெறுவாள். அப்போது கடும் கோடை. அந்த வெப்பத்துடன் தனக்குத் தரப்படும் வெப்பமான பிரசவ மருந்துகளையும் சாப்பிடுவது உடலை மிகவும் வருத்தும். குழந்தை பிறக்கும் போது தாய்க்கு மிகவும் உடல் வலி அதிகமாகி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இதனால் தான் ஆடியில் திருமணம் நடத்துவதில்லை.

[8] பிரதோஷம்:

பிரதோஷம் என்பது சிவனை வழிபட உகந்த நேரம். வறுமை, பயம், பாவம், மரண பயம், மரண வேதனை, நஞ்சால் ஏற்படும் அபாயம் ஆகியவை இதனால் அகலும்.
பிரதோஷமும் வழிபாட்டுப் பலன்களும்!
ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ தரிசனம் - நல்ல மங்களங்களைத் தரும்.

திங்கட்கிழமை பிரதோஷ தரிசனம் - நல்ல சிந்தனைகள் உண்டாகும். அஸ்வமேத யாகங்கள் செய்யக்கூடிய பலன்கள் கிட்டும்.

செவ்வாய்க் கிழமை பிரதோஷ தரிசனம் - பஞ்சமும், பட்டினியும் விலகிப் போகும்.

புதன் கிழமை பிரதோஷ தரிசனம் - புத்திரப் பேறு கிட்டும். கல்வி, கேள்விகளில் திறமை உண்டாகும்.

வியாழக்கிழமை பிரதோஷ தரிசனம் - குருவருளோடு திருவருளும் கைகூடும். வெள்ளிக்கிழமை பிரதோஷ தரிசனம் – எதிர்ப்புகள் நீங்கும்

சனிக்கிழமை பிரதோஷ தரிசனம் – அஷ்டலட்சுமிகளின் ஆசீர்வாதம் கிடைக்கும். எல்லா பிரதோஷங்களிலும் சனிப் பிரதோஷம் உயர்ந்தது. அதனால் மஹாபிரதோஷம் என்கிறார்கள்.

[9] கோயில்களிலும் ,வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம். இதன் அர்த்தம் தெரிந்து கொள்வோம் .

1). அகல் விளக்கு = சூரியன் ஆகும்
2.) நெய்/எண்ணெய்-திரவம் = சந்திரன்
3.) திரி = புதன்
4). அதில் எரியும் ஜ்வாலை =செவ்வாய்
5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு
6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு
7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கர =சனி
8). வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = கேது
9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை); அதாவது ஆசையை குறைத்துக்கொண்டால் சுகம் என அர்த்தம்
ஆசைகள் நம்மை அழிக்கிறது ; மோட்சம் கிடைக்காமலn் மீண்டும் மீண்டும் கர்மா நம்மைg மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது.
இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்..

[10] ஸ்படிக மாலை :

ஸ்படிக மாலை அணிவதில் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஸ்படிக மாலையை ஒருநாள் முழுவதும் கன்று ஈன்ற பசுவின் சாணத்தில் மூழ்க வைத்திருந்து, பிறகு தண்ணீர், பால் போன்றவற்றால் சுத்தம் செய்து தகுந்த ஒரு குருவின் மூலம் அணிய வேண்டும். தங்களுக்கென்று குரு இல்லாதவர்கள், கோயிலில் அனுபவம் வாய்ந்த குருக்களிடம் (அர்ச்சகர்) மூலமாக தெய்வ சன்னிதானத்தில் அணிய வேண்டும். இதனால் கிரகங்கள் மூலமாக ஏற்படும் இன்னல்கள் விலகும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். மேலும் பௌர்ணமி அன்று இம்மாலையை அணிவதால் உடலில் சக்தி கூடும் என்று சாஸ்திரம் கூறுகிறது


ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்ற வர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும். மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்படிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத் தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால் ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல. தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும்தான். காலையில் இருந்து இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணியும் போது அவரது உடற்சூட்டை இந்த ஸ்படிகம் தன்வசம் இழுத்துக் கொள்ளும். காலையில் ஒருவர் ஸ்படிகத்தை அணியும் முன் அது குளிர்ச்சியாகவும் இரவில் அதை கழட்டும்போது உஷ்ணமாக இருப்பதைக் கொண்டு இதை நீங்கள் உணரலாம்.


இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும். அப்போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும். அந்த தரு ணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறை வதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்க ளுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.

[11]பூஜையின் போது மணி அடிக்கப்படுவது ஏன்?

நமது இருப்பிடத்துக்கு வரும் பெரியோர்களை மேளம் தாளம் முதலிய மங்கள வாத்ய ஓசைகளுடன் வரவேற்கிறோமல்லவா அதைப்போன்றே பூஜை செய்யுமிடத்துக்கு வரும் தெய்வங்களை வரவேற்பதற்காகவே மணி ஓசை எழுப்பப்படுகிறது

தேவர்களை வரவேற்பதற்காகவும் பூஜை செய்யும் இடத்தில் இருந்து நமக்கு இடையூறுகளைத் தரும் ராக்ஷஸர்களை விலக்குவதற்காகவும் தெய்வங்களை வரவழைப்பதற்குக்காகவுமே மணி ஓசை எழுப்பப்படுகிறது.பூஜையின் போது நாம் அடிக்கும் மணி ஓசை கருடாழ்வாரின் ஒலி அல்லது ரிஷபத்தின் சப்தம் போன்று இருக்க வேண்டும் என்பதற்காகவே தான் பூஜா மணியின் மீது கருடர் அல்லது ரிஷப உருவம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த மணியின் ஒலி பூஜை செய்யப்படும் தெய்வங்களுக்கும் பூஜை செய்பவருக்கும் ஆனந்தத்தைத் தரும்


நவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள்:


1.சூரியபகவான் - சனிக்கிழமை அன்று 7 வகையான தானியங்களை ஊற வைத்து ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவற்றைப் பொடி செய்து எறும்புகளுக்குப் போடவும்.இதை 7 ஞாயிற்றுக்கிழமை செய்து வர சூரியனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.


2.சந்திரபகவான் - வளர்பிறை திங்கள் கிழமை அன்று வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி அதில் கொஞ்சம் பழைய வெல்லத்தைப் போட்டு விடவும்.சந்திரனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.


3.செவ்வாய்பகவான் - தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக ஸ்வீட் வாங்கிப் பிச்சைக்காரர்களுக்குத் தானம் செய்ய செவ்வாய்க் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.


4.புதபகவான் - பூஜை அறையில் ஒரு செம்பில் கங்கா ஜலம் வைத்திருந்தால் புதன் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.


5.குருபகவான் - வியாழக்கிழமை தோறும் குங்குமப்பூவை மெழுகுப் பதமாக அரைத்து குங்குமம் கலந்து நெற்றில் திலகம் இட்டு வரக் குருபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.


6.சுக்ரபகவான் - சிறிய வெண்ணிறப் பட்டுத் துணியில் வாசனை உள்ள மலர் வைத்து முடிந்து அதை ஓடும் நீரில் விட்டு விட சுக்கிரனால் உண்டான கெடுபலன்கள் குறையும்.


7.சனிபகவான் - ஒரு வெற்றிடத்தில் அல்லது வீட்டுப் பின்புற முற்றத்தில் கறுப்புத் துணியில் கருப்பு எள் வைத்து முடிந்து நெருப்பில் போட்டு எரிக்கச் சனிபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.


8.கேது பகவான் - இரண்டு போர்வைகள் வேறு வேறு நிறத்தில் வாங்கிப் பிச்சைக்காரர்கள் அல்லது ஏழை முதியவர்களுக்குத் தானமாக வழங்க கேது பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.


9.ராகு பகவான் - பாம்பாட்டிகளிடம் இருந்து ஒரு பாம்பை விலைக்கு வாங்கிக் அவற்றைக் காட்டில் கொண்டுபோய் விட ராகு பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.இதை நாகபஞ்சமி (ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி ) அன்று செய்யவும்.
LORD SHIVA ASTOTHARAM 

 1. ஓம் ஶிவாய னமஃ
 2. ஓம் மஹேஶ்வராய னமஃ
 3. ஓம் ஶம்பவே னமஃ
 4. ஓம் பினாகினே னமஃ
 5. ஓம் ஶஶிஶேகராய னமஃ
 6. ஓம் வாமதேவாய னமஃ
 7. ஓம் விரூபாக்ஷாய னமஃ
 8. ஓம் கபர்தினே னமஃ
 9. ஓம் னீலலோஹிதாய னமஃ
 10. ஓம் ஶம்கராய னமஃ (10)
 11. ஓம் ஶூலபாணயே னமஃ
 12. ஓம் கட்வாம்கினே னமஃ
 13. ஓம் விஷ்ணுவல்லபாய னமஃ
 14. ஓம் ஶிபிவிஷ்டாய னமஃ
 15. ஓம் அம்பிகானாதாய னமஃ
 16. ஓம் ஶ்ரீகம்டாய னமஃ
 17. ஓம் பக்தவத்ஸலாய னமஃ
 18. ஓம் பவாய னமஃ
 19. ஓம் ஶர்வாய னமஃ
 20. ஓம் த்ரிலோகேஶாய னமஃ (20)
 21. ஓம் ஶிதிகம்டாய னமஃ
 22. ஓம் ஶிவாப்ரியாய னமஃ
 23. ஓம் உக்ராய னமஃ
 24. ஓம் கபாலினே னமஃ
 25. ஓம் கௌமாரயே னமஃ
 26. ஓம் அம்தகாஸுர ஸூதனாய னமஃ
 27. ஓம் கம்காதராய னமஃ
 28. ஓம் லலாடாக்ஷாய னமஃ
 29. ஓம் காலகாலாய னமஃ
 30. ஓம் க்றுபானிதயே னமஃ (30)
 31. ஓம் பீமாய னமஃ
 32. ஓம் பரஶுஹஸ்தாய னமஃ
 33. ஓம் ம்றுகபாணயே னமஃ
 34. ஓம் ஜடாதராய னமஃ
 35. ஓம் க்தெலாஸவாஸினே னமஃ
 36. ஓம் கவசினே னமஃ
 37. ஓம் கடோராய னமஃ
 38. ஓம் த்ரிபுராம்தகாய னமஃ
 39. ஓம் வ்றுஷாம்காய னமஃ
 40. ஓம் வ்றுஷபாரூடாய னமஃ (40)
 41. ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய னமஃ
 42. ஓம் ஸாமப்ரியாய னமஃ 
 43. ஓம் ஸ்வரமயாய னமஃ
 44. ஓம் த்ரயீமூர்தயே னமஃ
 45. ஓம் அனீஶ்வராய னமஃ
 46. ஓம் ஸர்வஜ்ஞாய னமஃ
 47. ஓம் பரமாத்மனே னமஃ
 48. ஓம்ஸோமஸூர்யாக்னி லோசனாய னமஃ
 49. ஓம் ஹவிஷே னமஃ
 50. ஓம் யஜ்ஞமயாய னமஃ (50)
 51. ஓம் ஸோமாய னமஃ
 52. ஓம் பம்சவக்த்ராய னமஃ
 53. ஓம் ஸதாஶிவாய னமஃ
 54. ஓம் விஶ்வேஶ்வராய னமஃ
 55. ஓம் வீரபத்ராய னமஃ
 56. ஓம் கணனாதாய னமஃ
 57. ஓம் ப்ரஜாபதயே னமஃ
 58. ஓம் ஹிரண்யரேதஸே னமஃ
 59. ஓம் துர்தர்ஷாய னமஃ
 60. ஓம் கிரீஶாய னமஃ (60)
 61. ஓம் கிரிஶாய னமஃ
 62. ஓம் அனகாய னமஃ
 63. ஓம் புஜம்க பூஷணாய னமஃ
 64. ஓம் பர்காய னமஃ
 65. ஓம் கிரிதன்வனே னமஃ
 66. ஓம் கிரிப்ரியாய னமஃ
 67. ஓம் க்றுத்திவாஸஸே னமஃ
 68. ஓம் புராராதயே னமஃ
 69. ஓம் பகவதே னமஃ 
 70. ஓம் ப்ரமதாதிபாய னமஃ (70)
 71. ஓம் ம்றுத்யும்ஜயாய னமஃ
 72. ஓம் ஸூக்ஷ்மதனவே னமஃ
 73. ஓம் ஜகத்வ்யாபினே னமஃ
 74. ஓம் ஜகத்குரவே னமஃ
 75. ஓம் வ்யோமகேஶாய னமஃ
 76. ஓம் மஹாஸேன ஜனகாய னமஃ
 77. ஓம் சாருவிக்ரமாய னமஃ
 78. ஓம் ருத்ராய னமஃ
 79. ஓம் பூதபதயே னமஃ 
 80. ஓம் ஸ்தாணவே னமஃ (80)
 81. ஓம் அஹிர்புத்ன்யாய னமஃ
 82. ஓம் திகம்பராய னமஃ
 83. ஓம் அஷ்டமூர்தயே னமஃ
 84. ஓம் அனேகாத்மனே னமஃ
 85. ஓம் ஸ்வாத்த்விகாய னமஃ
 86. ஓம் ஶுத்தவிக்ரஹாய னமஃ
 87. ஓம் ஶாஶ்வதாய னமஃ
 88. ஓம் கம்டபரஶவே னமஃ
 89. ஓம் அஜாய னமஃ 
 90. ஓம் பாஶவிமோசகாய னமஃ (90)
 91. ஓம் ம்றுடாய னமஃ
 92. ஓம் பஶுபதயே னமஃ
 93. ஓம் தேவாய னமஃ
 94. ஓம் மஹாதேவாய னமஃ
 95. ஓம் அவ்யயாய னமஃ
 96. ஓம் ஹரயே னமஃ
 97. ஓம் பூஷதம்தபிதே னமஃ
 98. ஓம் அவ்யக்ராய னமஃ
 99. ஓம் தக்ஷாத்வரஹராய னமஃ
 100. ஓம் ஹராய னமஃ (100)
 101. ஓம் பகனேத்ரபிதே னமஃ
 102. ஓம் அவ்யக்தாய னமஃ
 103. ஓம் ஸஹஸ்ராக்ஷாய னமஃ
 104. ஓம் ஸஹஸ்ரபாதே னமஃ
 105. ஓம் அபபர்கப்ரதாய னமஃ
 106. ஓம் அனம்தாய னமஃ
 107. ஓம் தாரகாய னமஃ
 108. ஓம் பரமேஶ்வராய னமஃ (108)

27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்

 1.  அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
 2. பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
 3. கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
 4. ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு)
 5. மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
 6. திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்
 7. புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஷ்ணு)
 8. பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)
 9. ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
 10. மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
 11. பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
 12. உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி
 13. ஹஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
 14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
 15. சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
 16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்
 17. அனுசம் - ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்
 18. கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
 19. மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
 20. பூராடம-ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்(சிவபெருமான்)
 21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்
 22. திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு)
 23. அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு)
 24. சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
 25. பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
 26. உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
 27. ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன் 

Make a free website with Yola